திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (07:18 IST)

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு ஜெர்மனி, அமெரிக்காவின் ரியாக்சன்.. இந்தியா பதிலடி..!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாடுகள் கூறிய கருத்துக்கள் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் அவரது கைது குறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்திய நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கோட்பாடுகள் அனைத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய அரசு ஜெர்மனியின் கருத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளது என்றும் இந்திய நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிடுவது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவது சமம் என்றும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது

அதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறை கெஜ்ரிவால் கைது குறித்த செய்திகளை கண்காணித்து வருகிறோம் என்றும் நியாயமான வெளிப்படையான சட்ட செயல் முறையை உறுதி செய்ய இந்திய அரசை ஊக்குவிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

Edited by Siva