புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 மார்ச் 2024 (23:00 IST)

இஸ்ரேல் - ஹெஸ்புலா சண்டை தீவிரம் - 3.3 லட்சம் இஸ்ரேலியர்கள் இடப்பெயர்வு

israel -Palestine
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை தொடர்ந்து ஹெஸ்பொல்லா – இஸ்ரேல் ராணுவம் இடையேயான சண்டை தீவிரம் அடைந்துள்ளது. ஹமாஸுக்கு துணை நிற்கும் விதமாக இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை தொடுத்துள்ளது.
 
எல்லைப் பகுதிகளில் வசித்த சுமார் 3,30,000 இஸ்ரேலியர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். தீவிரமான சண்டை லெபனான் எல்லையின் இருபுறமும் உள்ள நகரங்களை காலி செய்துள்ளது.
 
"20 வருடங்கள் அமைதியாக இருந்தது. நிச்சயமற்ற நிலையும் இருந்தது. எதிரிகள் இடையே என்ன நடக்கிறது. அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள்? என தெரியவில்லை. இந்த சமயத்தில் அவர்கள் வளர்ந்துவிட்டனர். அமைதியாக வாழ பழகிவிட்டோம். ஆனால் தற்போது அவர்களை இங்கிருந்து தூரமாக தள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
 
கிர்யத் ஷ்மோனா குடியிருப்புவாசிகளை போலவே எங்களிடம் வலுவான ராணுவம் உள்ளது. செல்வதற்கு ஒரு இடமும் இல்லை. நான் என்கே போவேன்? இங்குதான் எனக்கு வேலை இருக்கிறது. எல்லாமே அருகில் இருக்கிறது. நான் என் வீட்டில் இருக்க வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர் ஒருவர் கூறினார்.