செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (22:10 IST)

சன்பிக்சர்ஸிடம் அடம்பிடிக்கும் லோகேஷ்?’ ரஜினி171’ படத்தில் அது நடக்குமா?

rajini 171
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படம் ரஜினி171.
 
இப்படத்தின் கேமரா மேன் மனோஜ் பரமஹம்சா  வேண்டுமென லோகேஷ் கேட்டுள்ளார். ஏற்கனவே சன்பிக்சர்ஸ் படத்தில்  அவர்தான் கேமரா மேன் என்பதாலும், அவரே சொந்த அவுட்டோர் யூனிட் வைத்திருப்பதாலும் ஜெயிலர் படத்திற்கே ரூ.13 கோடி செலவானதால் சன்பிக்சர்ஸ் அதிருப்தி அடைந்ததாம்.
 
இதையடுத்து, தலைவர் 171 படத்திற்காக சமீபத்தில் லோகேஷ் கனகராஜூடன் சக்பிக்சர்ஸ் மீட்டில் ஒன்று போட்டதாம். இதையடுத்து,  ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தை லோகேஷ் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், இதற்கு சன்பிக்சர்ஸ் உடன்பட மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ஏனென்றால் ஐமேக்ஸ் கேமரா பயன்படுத்தினால் அது அமெரிக்காவில் இருந்து வரவழைக்க வேண்டும்,  இதற்கென தனிப்பட்ட ஆட்கள் பிளைட் டிக்கெட் என அதிகளவில்  செலவாகும் ....என்பதால் யோசித்த சன்பிக்சர்ஸ் இதை மறுக்கும் பட்சத்தில் லோகேஷ் நிறுவனத்துடன் உடன்படுவாரா? இல்லை அதே கேமராதான் வேண்டும் என்று அடம்பிடிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.