1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 ஜனவரி 2025 (11:50 IST)

ட்விட்டரை அடுத்து டிக்டாக் செயலியை வாங்குகிறாரா எலான் மஸ்க்? பரபரப்பு தகவல்கள்..!

டிக் டாக் எனப்படும் மொபைல் செயலி உலகளவில் பிரபலமாக இருந்த நிலையில், இந்தியா உட்பட பல நாடுகள் அதனை தடை செய்தன. இந்த நிலையில், அமெரிக்காவிலும் சமீபத்தில் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்தின் இந்த செயலி, தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டதாக பல நாடுகள் அறிவித்தன. குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் இந்த செயலியை 17 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வந்த நிலையில், தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை நீக்க சீன அரசு முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களிடம் டிக் டாக் நிர்வாகத்தை ஒப்படைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்று எலான் மஸ்க் அவர்களும் தனது எக்ஸ் பக்கத்தில் டிக் டாக் செயலியை வாங்குவது குறித்து தனது ஃபாலோயர்களிடம் கருத்து கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran