திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு.. எவரெஸ்ட் சிகரம் ஏற தடை..!
நேற்று காலை திபெத் மற்றும் நேபாள எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 126 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க அமைப்பு படைகள் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று காலை விபத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவில் 7.1 என அளவிடப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் முதல் கட்டத்தில் 95 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக 188 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு மீட்பு குழுவினர் இன்னும் சில இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுவதால், உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், 24 மணி நேரமும் இடைவிடாமல் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Mahendran