1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 ஜனவரி 2025 (17:50 IST)

வெளிநாட்டினரிடம் வரி வசூலிக்க புதிய துறை.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..!

வெளிநாட்டினாரிடம் இருந்து வரி வசூல் செய்வதற்காக புதிய துறை உருவாக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் டொனால்ட் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் பதவியேற்கும் முன்பே பல புதிய துறைகளை உருவாக்கிய நிலையில் தற்போது அவர் வெளிநாட்டினரிடம் வரி வசூலிப்பதற்கு என ஒரு புதிய துறையை உருவாக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது என்றும், வெளிநாட்டு வருவாய் சேவையை இந்த துறை கவனித்துக் கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து பணம் வருமானம் செய்பவர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்போம் என்றும், இதற்கு தான் இந்த புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தான் பதவி ஏற்றவுடன் இந்த துறை செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை மீண்டும் ஒரு சிறந்த பொருளாதார நாளாக மாற்றுவோம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.



Edited by Siva