1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 ஜனவரி 2025 (10:15 IST)

400 கோடிக்கு மேல் பந்தயம்.. தடையை மீறி களைகட்டும் சேவல் சண்டை..!

cock fight
ஆந்திராவில் சேவல் சண்டை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி சேவல் சண்டை நடந்து வருவதாகவும், சுமார் 400 கோடிக்கு மேல் பந்தயம் கட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திராவில் சங்கராந்தி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சேவல் சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த சண்டையை பல தொலைக்காட்சிகள் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தன. 
 
ஆக்ரோஷமாக கூண்டுகளில் இருந்து வெளியே வரும் சேவல்களின் மோதல் நடைபெறும் என்றும், சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்பட்டு இருக்கும் என்றும், கத்தியால் வெட்டப்பட்டு இரக்கம் சேவல் தோல்வி அடையும் என்றும், வெற்றிய சேவல் வெற்றி பெறும் என்றும் அறிவிக்கப்படும்.
 
இந்த நிலையில், சேவல் சண்டையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திர அரசு தடை செய்த நிலையில், நேற்று ஒரே நாளில் ஆந்திராவில் உள்ள பல நகரங்களில் சேவல் சண்டை நடந்ததாகவும், சுமார் 400 கோடிக்கு மேல் பந்தயம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran