வேலை நீக்கம் செய்கிறது மெட்டா நிறுவனம்.. 3600 பேருக்கு இமெயில் அனுப்பியதாக தகவல்..!
மெட்டா நிறுவனத்தில் இருந்து 3600 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக பணியாளர்களை நீக்கி வரும் நிலையில், இனி வரும் ஆண்டுகளில் ஏஐ டெக்னாலஜி தான் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், Facebook, Instagram, WhatsApp உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தும் மெட்டா நிறுவனம், 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், வேலை நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு போதுமான இழப்பீடும் அளிக்கப்படும் என்று மெட்டா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
தற்போது மெட்டா நிறுவனத்தில் 72,000 பேர் வேலை செய்து வரும் நிலையில், அதில் 3600 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva