செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (15:03 IST)

நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து.! இந்தியர்கள் 14 பேர் பலி..!!

Bus Accident
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 14 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநில பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று (UP FT 7623) நேபாளத்தின் பிரபல சுற்றுலா தலமான பொக்காரா நகரில் இருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கி இன்று  பயணித்து கொண்டிருந்தது.
 
தனாஹுன் மாவட்டத்துக்குட்பட்ட ஐனா பஹாரா என்ற இடத்தில் பயணித்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மர்சங்டி ஆற்றில் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தை நேபாள காவல் துறை உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில், 14 பேர் பலியானதாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


நேபாள நாட்டின் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தைச் சேர்ந்த 45 பேர் கொண்ட ஆயுதப்படை காவலர்கள் குழு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.