வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜூலை 2024 (14:34 IST)

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

Accident
உத்தர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
உத்தர பிரதேச மாநிலம் அமேதி, புர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் சுமார் 65 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 38 பேர் படுகாயம் அடைந்தனர். 
 
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 17 பேர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், அதேநேரம் அவர்களுக்கு தீவிர காயம் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் நிலையில் இருந்து மீண்டு வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து பீகார் பதிவெண் கொண்டு இருந்த நிலையில், பீகாரில் இருந்து புது டெல்லி நோக்கி சென்று கொண்டு இருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

 
விபத்து நடந்த சமயத்தில் அருகில் இருந்த கிராம மக்கள் துரிதமாக செயல்பட்டு படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.