ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2024 (13:44 IST)

ஈரானில் பேருந்து விபத்து.! பாகிஸ்தான் யாத்ரீகர்கள் 35 பேர் பலி..!!

Bus Accident
ஈரானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில், பாகிஸ்தான் யாத்ரீகர்கள் 35-பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
பாகிஸ்தானில் இருந்து ஈராக்கிற்கு, 50க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பேருந்தில்  சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்திய ஈரானின் யாஸ்த் மாகாணத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 
இதில் 35 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் லர்கானா நகரைச் சேர்ந்தவர்கள். மேலும் பலத்த காயமடைந்த 18 பேர்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு துறை அமைச்சருமான இஷாக் தார்  இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடலை, பாகிஸ்தானுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.