1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:08 IST)

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு !!

shehbaz sharif
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக  ஷபாஸ் ஷேரீப்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான் கான் அரசின் திறமையின்மைதான் காரணம் என எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டு வந்தன.

கடந்த 3 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நட்க்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டசபையில் அன்று தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரண  நடத்திய சுப்ரீம் கோர்ட், பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்ஹ்டது செல்லாது என தீர்ப்பளித்தது. இம்ரான் அரசு மீதான  நம்பிக்கையில்லா தீர்மானம்  மீது நடத்த வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என  மீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில், இம்ரான் கான் அரசு  பெரும்பான்மையை இழந்துவிட்டது. பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். எனவே இன்று மீண்டும் பாராளுமன்றம் கூடியது.  இதில் பாகிஸ்தான் பிரதமராக ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை அவர் பிரதமராகப் பதவியேற்கலாம் எனக் கூறப்படுகிறது.