1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Court approved sasika dimissed from admk

சசிக்கலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும்! – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Tamilnadu
சசிக்கலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த நிலையில் அவர் வகித்த அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை சசிக்கலா ஏற்றுக் கொண்டார். பின்னர் 2017ல் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்ற நிலையில் அவரையும், டிடிவி தினகரனையும் அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் இல்லாமல் பொதுக்குழு கூட்டி எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என சசிக்கலா தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் சசிக்கலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் முடிவு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. இது சசிக்கலா ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால்…! – தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!