தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகக் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மித கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதில்,கடலூர் , அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் திருநெல்வேலி மற்றும், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தமிழகம் டெல்டா மாவட்டங்களிலும் மன மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.