தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் - செங்கோட்டையன்
தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் வேறு எவராலும் ஆள முடியாது என அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நபர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து பாஜக போட்டியிட்டது.
இதையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என கூறினார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன் சட்டப்பேர்வையில் இன்று, தமிழ் நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் எனத் தெரிவித்துள்ளார்.