புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (11:01 IST)

அமெரிக்காவின் மியாமி நகரில் 12 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலரை காணவில்லை. 

 
இதுவரை 102 பேரை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். 99 பேர் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை. கட்டட இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதில் சில லத்தின் அமெரிக்க குடியேறிகளும் காணாவில்லை என்று தூதரகம் தெரிவித்துள்ளது. 
 
பராகுவே நாட்டின் அதிபரின் மனைவி சில்வான லோபெஸ் மொரெய்ராவின் சகோதரி மற்றும் அவரின் குடும்பமும் இந்த இடிபாடிகளில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.