இரண்டே வாரத்தில் இரட்டிப்பான டெல்டா ப்ளஸ்! – அதிர்ச்சியில் அமெரிக்கா!
கொரோனாவில் மாற்றமடைந்த வகையான டெல்டா ப்ளஸ் கொரோனா அமெரிக்காவில் வேகமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் வெவ்வேறு நாடுகளில் பல வகையில் உருமாறி வருகிறது. அவ்வாறு இந்தியாவில் உறுமாறிய கொரோனா வைரஸுக்கு டெல்டா வைரஸ் என பெயரிடப்பட்டது.
இந்த வைரஸ் பாதிப்பு உலக நாடுகள் பலவற்றிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதன் மற்றுமொரு உருமாற்றமான டெல்டா ப்ளஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் டெல்டா ப்ளஸ் வகை பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இரண்டே வாரத்தில் இரண்டு மடங்காக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மற்ற வைரஸ்களை விட வீரியமிக்கதாகவும், வேகமாக பரவுவதாகவும் டெல்டா ப்ளஸ் உள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அமெரிக்க தடுப்பூசிகள் டெல்டா ப்ளஸ் மீது திறனுடன் செயல்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.