உக்ரைனில் போர் நிறுத்தப்படுமா? – இன்று இரு நாடுகள் மீண்டும் பேச்சுவார்த்தை!
உக்ரைனில் ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் அடுத்த கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில், இந்த போரை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. மேலும் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுக்கு பல நாட்டு தலைவர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனாலும் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் அதிபரை நேரடியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த மறுத்து வருகிறார்.
சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோடு பேசியபோது புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் புதின் பேச்சுவார்த்தை முன் வராமல் உள்ளார்.
இந்நிலையில் இன்று உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக மற்றுமொரு பேச்சுவார்த்தை அதிகாரிகள் தரப்பில் இருந்து நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 20 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தை உலக நாடுகளின் கவனம் பெற்றுள்ளது.