வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2024 (07:16 IST)

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக இன்று சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
 
கன மழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
அதேபோல், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய இரண்டு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சற்று முன் வெளியான செய்தியின் படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இன்று காலை 5 மணி முதல் சில பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 
 
Edited by Siva