திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (09:02 IST)

பிரதமர் ஆனதும் முதல் கால் உக்ரைன் அதிபருக்கு..! ரிஷி சுனக் எடுத்த முடிவு!

rishi sunak
இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பதவியேற்ற நிலையில் உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இங்கிலாந்தின் பிரதமராக பதவி வகித்து வந்த லிஸ் ட்ரஸ் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதை தொடர்ந்து இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இங்கிலாந்தின் மிக இளம் பிரதமரும் ரிஷ் சுனக்கே ஆவார். இதனால் அடுத்து ரிஷி சுனக் என்ன செய்ய போகிறார் என அவரது செயல்பாடுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பதவியேற்பு உரையில் பேசிய ரிஷி சுனக் “நான் தவறுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்டுள்ளேன். நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்லாமல், செயலால் ஒன்றிணைப்பேன்” என பேசியுள்ளார்.


பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ரிஷி சுனக். உக்ரைனில் போர் நிலவரம் குறித்து கேட்டறிந்த அவர், உக்ரைனுக்கு இங்கிலாந்தின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited By Prasanth.K