இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு!
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ரிஷி சுனக், பொருளாதாரத்தை உயர்த்துவதே தன் இலக்கு என்று தெரிவித்துள்ளார்
கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக புகார் வந்ததை அடுத்து இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார்.
இதையடுத்து, நடந்த தேர்தல் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த லிஸ் டிரஸ் சமீபத்தில் புதிய பிரதமராகப் பதவி ஏற்ற நியையில், வரி விலக்கு அளித்தது, மினி பட்ஜெட் தாக்குதலில் சர்ச்சையாலும், பொருளாதா நெருக்கடி, அவர் அமைச்சரவையின் நிதியமைச்சரை நீக்கம் செய்ததுடன், தன் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், லிஸ் டிரஸ் 20 ஆம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க உள்ளது. இதில் போட்டியிடுவதாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்த நிலையில் அவர் பின்வாங்கினார்.
எனவே மற்றொருவர் பென்னி மோர்டாட்சு இதில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு போதிய ஆதரவில்லாத நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டடியின்றி தேர்வு செய்யப்பட்டார்.இத்தேர்தலில் ரிஷி சுனக் போட்டியிடவுள்ளதாக அறித்துள்ள நிலையில் அவருக்கு 100 எம்பிகளின் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தகக்து.
இதையடுத்து, இங்கிலாந்து மன்னர் சார்லை சந்தித்தார் ரிஷி சுனக். இந்த சந்திப்பின்போது, ஆட்சி அமைக்கும்படி அவர் ரிஷியை கேட்டுக் கொண்டார். பின்னர், ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராககப் பொறுப்பேற்றார்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக், தேர்தலின் போது அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன், மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதாகவும், கடமையை உணர்ந்து செயல்படப்போவதாகவும், பிரிட்டன் பொருளாத நெருக்கடியை சீரமைத்து பொருளாதாரத்தை உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.