1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2022 (16:27 IST)

ஆண்ட பரம்பரையை ஆளும் பரம்பரை: ரிஷி சுனக் குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா!

Anand Mahindra
ஆண்ட பரம்பரையை ஆளும் பரம்பரை என இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்க இருக்கும் ரிஷி சுனக் குறித்து இந்திய பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இங்கிலாந்து பிரதமராக இன்று ரிஷி சுனக் பதவி ஏற்க இருக்கும் நிலையில் அவருக்கு உலகெங்கிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அனைத்து இந்திய தலைவர்களும் குறைந்த திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று வின்ஸ்டன் சர்ச்சில் கூறியிருந்தார்
 
ஆனால் இன்று நமது சுதந்திரத்தின் 75வது ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராக ஆகி இருப்பதை காண நாங்கள் தயாராக உள்ளோம், வாழ்க்கை அழகானது’ என்று தெரிவித்துள்ளார்
 
Edited by Siva