புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 மே 2020 (15:23 IST)

கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு அரிய வகை நோய் தொற்று- உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி ரிப்போர்ட்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதனோடு அரியவகை நோய் தொற்று ஒன்றும் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 44 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு 3 லட்சத்துக்கும் மேல் பலியாகியுள்ளனர். இந்த நோய்க்கு இதுவரையும் தடுப்பு மருந்து எதுவும் இல்லாததால் உலக நாடுகள் அனைத்தும் தடுமாறி வருகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தொழில் நுட்பத் தலைவர் மரியா வான் கெர்க்கோவா, ‘இங்கிலாந்தில் கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு வேறு சில அரிய வகை தொற்று நோயும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் பாதிப்பை கணிப்பது சற்று சிரமமாக உள்ளதாகவும், இந்த நோய் தொற்றை புரிந்துகொள்ள நாங்கள் முயன்று வருகிறோம். மேலும் இந்த தொற்று கொரோனா பாதிக்காத குழந்தைகளிடமும் உள்ளது’ எனக் கூறியுள்ளார். இதனால் உலக மக்கள் இடையே மேலும் பீதி அதிகமாகியுள்ளது.