வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 மே 2020 (14:01 IST)

சுய இன்பமே பெட்டர்: பாலியல் டிப் கொடுக்கும் அரசு!!

நெதர்லாந்து அரசு தங்களது துணையுடன் உறவுக்கொள்வதை விட சுய இன்பம் காண்பதே சிறந்தது என அட்வைஸ் கொடுத்துள்ளது. 
 
கடந்த மார்ச் 23 ம் தேதி முதல் நெதர்லாந்தில் லாக் டவுன் நடைமுறைகள் அமலில் உள்ளது. மொத்தமான அந்நாட்டில் 43,880 கொரோனா தொற்றும், 5,500 மரணங்களும் இதுவரை பதிவாகியுள்ளது.
 
கடந்த திங்கட்கிழமை முதல் லாக் டவுன் தளர்வு நடவடிக்கைகளை நெதர்லாந்து எடுத்து வருகிறது. இந்நிலையில் நெதர்லாந்தில் திருமணமாகாதவர்கள் மற்றும் துணையில்லாதவர்கள் ஒரு சிறந்த பாலியல் துணையைக் கண்டுபிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
துணையை தேர்வு செய்யும் போது கொரோனா தங்களுக்குப் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்களது துணைக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், சுய இன்பம் காண்பதே சிறந்த வழி எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளது.