திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 16 மே 2020 (14:28 IST)

தினமும் 10,000 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க திட்டம் - முதல்வர்

சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  வரும் மே 17 ஆம் தேதிக்குப் பிறகு 4ஆம் கட்ட பொது ஊரடங்கு உத்தரவு  புதிய முறையில் அமுல்படுத்தப்பட வுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கல் நடை பயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து, தமிழக முதல்வர் கூறியுள்ளதாவது :

சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு பயண செலவுகளை அரசே ஏற்று தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதால், வெளி மாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ செல்ல வேண்டாமெனவும் அதுவரை முகாம்களிலேயே தங்கியிருக்கவும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், நாள்தோறும் 10,000  தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு திட்டமுள்ளதாகவும்,  வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது முகாம்களிலேயெ தொடர்ந்து இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.