பிரான்சில் மீண்டும் தூசு தட்டப்படும் ரஃபேல் ஊழல்!
இந்தியாவிற்கு ரஃபேல் விமானம் தயார் செய்ய அளித்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்திற்காக ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் தற்போது பிரான்ஸ் ஊழல் தடுப்பு பிரிவு டசால்ட் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் பெரும் தொகை கை மாறியதாக தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஃபேல் விமான ஒப்பந்தத்திற்காக இந்திய இடைத்தரகருக்கு டசால்ட் நிறுவனம் ரூ.8.62 கோடி வழங்கியதாக தெரிய வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.