டிவிட்டருக்கு 85 லட்சம் ரூபாய் அபராதம்… ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு!

Last Updated: திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:53 IST)

டிவிட்டரில் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் இருப்பது சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் ரஷ்ய நீதிமன்றம் இந்திய மதிப்பில் 85 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ரஷ்யாவில் சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் நீக்கப்படாவிட்டால் அவற்றுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த வகையில் ரஷ்யாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என ரஷ்ய அரசு எச்சரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட உள்ளடக்க பதிவுகளை நீக்க் வேண்டும் என்றும் அவ்வாறு நீக்காவிட்டால் ரஷ்யாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அப்போது டிவிட்டர் அது சம்மந்தமான போராட்டங்களில் கலந்துகொள்ள குழந்தைகளை அழைத்ததாக ரஷ்ய அரசு மாஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில் டிவிட்டர் நிறுவனத்தின் மீதான தவறு நிருபிக்கப்பட்டதால் டிவிட்டருக்கு 85 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :