திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (06:26 IST)

இந்தியாவில் முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
தமிழகம் உள்பட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
உலகிலேயே ஒரு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்; 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,793 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 57,074 பேர்க்ளும் மும்பையில் 11,1623 பேர்க்ளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
மகாராஷ்டிரா - 57,074 (Highest One-Day Spike)
 
சட்டீஸ்கர் - 5,250
 
கர்நாடகா - 4,553
 
உபி - 4,136
 
டெல்லி - 4,033
 
தமிழகம் - 3,581
 
மத்திய பிரதேசம் - 3,178
 
பஞ்சாப் - 3,006
 
குஜராத் - 2,875
 
மேற்குவங்கம் - 1,957
 
ஹரியானா - 1,904
 
ஆந்திர பிரதேசம் - 1,730
 
ராஜஸ்தான் - 1,729