1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siv
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (06:51 IST)

இன்று முதல் 71 புதிய ரயில்கள் இயக்கம்: முன்பதிவு தேவையில்லை

முன்பதிவு செய்யப்படாத 71 ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ’பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் மேற்கொள்வதற்காக இந்திய ரயில்வே 71 ரயில்களை இன்று முதல் இயக்க திட்டமிட்டு உள்ளது என்று கூறியுள்ளார் 
 
குறிப்பாக வாரணாசி-சுல்தான்பூர், அமிர்தசரஸ் - பதான்கோட், பதான்கோட் பெரோஸ்பூர், டெல்லி -ரோஹ்தக், டெல்லி - பானிபட் ஆகிய ரயில்கள் இயங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மொபைல் ஆப் பயன்பாட்டின் வசதியை ரயில்வே மீண்டும் செயல்படுத்தும் என்று கூறிய அவர் இந்த வசதி காரணமாக பயணிகளுக்கு நேரம் மிச்சமாகும் என்றும் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
இந்திய ரயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது