செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (11:26 IST)

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: லண்டன் திரையரங்கில் நேரடி ஒளிபரப்பு!

Queen Elizabeth II
மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கை நேரடியாக லண்டனில் உள்ள திரையரங்குகளில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் தனது 96 ஆவது வயதில் கடந்த 8ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
மேலும் ராணியின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவிருக்கும் நிலையில் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு உள்பட உலகின் பல முன்னணி தலைவர்கள் லண்டன் சென்று உள்ளனர். 
 
இந்த நிலையில் ரானியின் இறுதிச் சடங்கை திரை அரங்குகள், பூங்காக்கள், மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் சினிமா திரை அரங்குகளுக்கு இராணியின் இறுதி ஊர்வலத்தை காண அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் ராணி எலிசபெத்தின்  இறுதி ஊர்வலத்தை பிபிசி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது