செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2022 (17:34 IST)

தேசிய சினிமா தினம் கொண்டாடும் தேதி ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு!

theater
தேசிய சினிமா தினம் வரும் 16ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி மாற்றப்பட்டுள்ளது.
 
 ஒவ்வொரு ஆண்டும் தேசிய சினிமா தினம் கொண்டாடப்படும் என்பதும் அந்த தினத்தில் திரையரங்குகள் பல்வேறு சலுகைகள் வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த ஆண்டு தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பிவிஆர் உள்பட பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அன்றைய தினம் 75 ரூபாய் கட்டணத்தில் புதிய திரைப்படங்களை பார்க்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.
 
இந்த நிலையில் தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே சலுகை கட்டணம் 75 ரூபாய் கட்டணத்தில் புதிய திரைப்படங்களை செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று ரசிகர்கள் பார்க்க முடியும்