ராணி எலிசபெத் கைப்பட எழுதிய ரகசிய கடிதம்: 2085ஆம் ஆண்டு தான் படிக்க வேண்டுமாம்!
ராணி எலிசபெத் தனது கைப்பட எழுதிய கடிதத்தை 2085ஆம் ஆண்டு தான் திறந்து படிக்க வேண்டும் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளுக்கு மேல் இருந்த ராணி எலிசபெத் சமீபத்தில் காலமான நிலையில் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது
அந்த கடிதம் ஆஸ்திரேலியாவின் மியூசியத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை 2085ஆம் ஆண்டு வரை திறந்து படிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது
இந்த கடிதத்தை ராணி எலிசபெத் எழுதியபோது 2085ஆம் ஆண்டு சிட்னி நகரில் தேர்வு மேயரை செய்யப்படும் ஒரு நல்ல நாளில் தான் இதைப் படிக்க வேண்டும் என குறிப்பு எழுதி வைத்திருக்கிறார். அதன் காரணமாக இந்த கடிதத்தை 2085ஆம் ஆண்டு வரை பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது