திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (11:54 IST)

கருத்தை நீக்கமுடியாதா? முடக்கிட வேண்டியதுதான்! – விக்கிப்பீடியாவை முடக்கிய பாகிஸ்தான்!

Wikipedia
இஸ்லாமிய மதம் குறித்த கருத்துகளை பிரபல விக்கிப்பீடியா தளம் நீக்காததால் அந்த தளத்தையே பாகிஸ்தான் முடக்கியுள்ளது.

இணையத்தில் அதிகமான வரலாற்று சம்பவங்கள், நபர்கள், அறிவியல் விளக்கங்கள் என பல தலைப்புகளிலும் தகவல்களை வழங்கும் தளம் விக்கிப்பீடியா. உலகம் முழுவதும் பலரால் இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், அதிலுள்ள தகவல்களை பார்வையாளர்களே எடிட் செய்யவும் முடியும்.

இந்நிலையில் சமீபத்தில் விக்கிப்பீடியாவில் இஸ்லாமிய மதம், கடவுள் குறித்து சர்ச்சை மற்றும் அவதூறு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த கருத்துகளை 48 மணி நேரத்திற்குள் விக்கிப்பீடியா நிறுவனம் நீக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.

ஆனால் விக்கிப்பீடியா தளம் அந்த தகவல்கள் எதையும் நீக்கவில்லை. இதனால் இஸ்லாமிய மதம் குறித்த அவதூறு கருத்துகளை வெளியிடுவதாக விக்கிப்பீடியா தளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துகள் நீக்கப்பட்டால் மட்டுமே விக்கிப்பீடியாவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K