நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
புதுவையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பெய்து உள்ள நிலையில், அங்கு பெரும்பாலான வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் முகாம்களாக மாற்றப்பட்டு, அங்கு வீடுகளை இழந்த பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நாளை புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுவையில் இயல்பு நிலை திரும்பும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு அநேகமாக விடுமுறை இருக்கும் எனவும், ஆனால் அதற்கான அறிவிப்புகள் தினசரி வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், தமிழகத்திலும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva