ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (22:08 IST)

ஷூட்டிங்கின் போது பிரபல நடிகைக்கு தீ விபத்து...

sharmeen akee
வங்கதேச நடிகை ஷர்மீன் அகீ ஷூட்டிங்கின்போது காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்காள தேசத்தைச் சேர்ந்த நடிகை ஷர்மீன் அகீ. இவர் சினியர்லி யுவர்ஸ், டாக்கா, பைஷே ஸ்ரபோன், பாண்டினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளர்.

வங்கதேச சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் ஷர்கீன் அகீ(27), இன்று வழக்கம் போல் மிர்பூர் பகுதியில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

அப்போது, மேக்கப் பறையின் ஒரு பொருள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த  விபத்தில் ஷமீன் அகீயின் கை, கால், முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர், விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.