7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!
தெலுங்கானா மாநிலத்தில் இன்று அதிகாலை நடந்த என்கவுண்டரில் ஏழு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வாரம் போலீஸ் இன்பார்மர்கள் இரண்டு பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றதை அடுத்து பதிலடியாக காவல்துறையினர் தீவிர தேர்தல் வேட்டை நடத்தினர்.
இன்று காலை ஐந்து முப்பது மணிக்கு பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுக்கும் நடந்த மோதலில் ஏழு மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சரணடைய சொல்லி காவல்துறை எச்சரித்தும் அவர்கள் சரணடையாமல் துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்ததாக, திருப்பி காவல்துறையினர் திருப்பி சுட்டதில், மாவோயிஸ்டுகள் கமிட்டி தலைவர் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தெலுங்கானா மாநில அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Siva