செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (17:56 IST)

மனைவியை கொன்று புதைத்த கணவன் கைது!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் மனைவியைக் கொன்று புதைத்த கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 குழந்தைகள்  உள்ளனர்.

தன் மனைவியுடன் வீட்டில் வசித்து வந்த  நிலையில், கடந்த 30 ஆம் தேதி தன் மனைவியைக் காணவில்லை என்று புகாரளித்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் இதனால் ஆத்திரத்தில் கழுத்து நெறித்துக் கொன்றதாகவும், கடந்த ஜனவரி 25 ஆம் தேதி, மனைவியைக் கொன்று டோங்காவில் உடலை எடுத்துச் சென்று உடலை புதைத்ததாகவும் ஒப்புக் கொண்டார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.