செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (09:38 IST)

கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் – பாகிஸ்தானில் அவசரநிலை !

வெட்டுக்கிளிகள் தாக்குதல்

பாகிஸ்தானில் பயிரிடப்பட்டுள்ள கோதுமை பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதால் அவசர நிலையைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தெற்கே  தெற்கு சிந்து முதல் வடகிழக்கில் கைபர் பக்துவா வரை விவசாயிகள் கோதுமை பயிரிட்டுள்ளனர். இதையடுத்து நன்றாக வளர்ந்து நிற்கும் பயிர்களை நாசம் செய்யும் விதமாக வெட்டுக்கிளிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

வழக்கமாக வெட்டுக்கிளிகள் தாக்குதல் இருக்கும் என்றாலும் இப்போது 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாக்குதல் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளனர். தாக்குதலை சமாளிக்கும் விதமாக தகவல் துறை மந்திரி ஃப்ர்டோஸ் அஸ்க்யூ அவான் அவசரநிலை பிரகடனப்படுத்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.