பிப்ரவரி 4ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: பரபரப்பு தகவல்

Last Modified வெள்ளி, 31 ஜனவரி 2020 (22:08 IST)
18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி 3 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று, அதன் பின்னர் ஆஸ்திரேலியாவுடன் காலிறுதிப் போட்டியில் மோதி, அதிலும் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோத உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த போட்டி வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே இரு நாடுகளுக்கும் இடையே பரபரப்பு ஏற்படும் என்பதால் பிப்ரவரி 4-ஆம் தேதி இந்த போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :