1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (09:00 IST)

சீனாவில் சிக்கிக்கொண்ட பாகிஸ்தான் மக்கள்: கண்டுகொள்ளாத இம்ரான் கான்!

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்காமல் பாகிஸ்தான் இருப்பதற்கு அந்நாட்டு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வூகான் பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 300க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் இறந்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி இரண்டு முறை சீனாவுக்கு சென்ற விமானத்தில் 7 மாலத்தீவை சேர்ந்தவர்கள் உட்பட 323 பேர் பத்திரமாக மீட்டு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு ஹரியானாவில் உள்ள சிறப்பு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் மக்கள் பலரும் சீனாவில் சிக்கி தவிக்கின்றனர். ஆனால் அவர்களை மீட்க பாகிஸ்தான் அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தானியர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.