1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (16:17 IST)

கோமாளியான டிரம்ப்: அமெரிக்காவை ஏமாற்றும் வடகொரியா?

வடகொரியா தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் மோதல் போக்கு நிலவியது. 
 
அதன் பின்னர் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் இந்த சூழ்நிலைகளை மாற்றியது. அதன் பின்னர் வட்கொரிய அதிபர் கிம் தென் கொரியா சென்று கொரிய நாடுகளுக்கு மத்தியில் அமைதி திரும்பியது. 
 
அதன் பின்னர் சமீபத்தில் டிரம்ப், கிம் சந்தித்தனர். அணு ஆயுதங்கள் குறித்த பேச்சுவார்த்தையும், சில முக்கிய ஒப்பந்தளும் கையெழுத்தாகின. வடகொரியா, தனது முழு அணு ஆயுதங்களையும் அழித்த பின்னர் அந்நாட்டின் மீதான தடை நீக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது. 
 
இந்நிலையில், அணு ஆயுத சோதனைக்காக எரிபொருள் உற்பத்தியை வடகொரியா ரகசியமாக சமீபத்தில் அதிகரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது.
 
இது குறித்து டிரம்ப் எந்தவித கருத்தையும் வெளியிடாத நிலையில், இந்த தகவல் உறுதியானால் வெள்ளை மாளிகையில் இருந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து செய்தி வெளியாக கூடும் என தெரிகிறது. 
 
அமெரிக்காவின் தடைகளை மீறி அணு ஆயுத சோதனை நடத்தி, தற்போது ஒப்பந்தங்களை மீறி சில செயல்களில் வடகொரியா ஈடுப்பட்டு வருவதால், அமெரிக்கா அதிபர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.