1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (19:47 IST)

அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஹார்லி டேவிட்சனிடம் கெஞ்சும் டிரம்ப்

உலகின் முன்னணி இருசக்கர் வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டெவிட்சன் நிறுவனம் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வெளியேறி ஆசிய அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு தனது நிறுவனத்தை மாற்றவுள்ளதாக அறிவித்தது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
முன் எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகள் வர்த்தக போரை தொடங்கியுள்ளது. பகை நாடுகளான இந்தியாவும் சீனாவும் கூட இந்த விஷயத்தில் கைகோர்த்து கொண்டன. இந்திய, சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரியை உயர்த்தியதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இந்தியாவும் சீனாவும் வரியை உயர்த்தின. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே இரும்பு, அலுமினியம் போன்ற மூலப்பொருட்களுக்கு அதிக வரி செலுத்தி இறக்குமதி செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பின்னர் தயாரித்த இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யவும் கூடுதல் வரியை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இருமுனை வரி நெருக்கடியால் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து ஹார்லி டேவிட்சன் வெளியேற கூடாது என்றும், அந்த நிறுவனத்திற்காக அமெரிக்க அரசு நிறைய செய்துள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் டிரம்ப்பின் கோரிக்கையை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய தயாரில்லை என்று கூறியதாக தெரிகிறது