ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (11:34 IST)

செய்தி நிறுவனத்திற்குள் புகுந்து தாக்குதல் - 5 பத்திரிக்கையாளர்கள் பலி

அமெரிக்காவில் நாளிதழ் நிறுவனம் ஒன்றிற்குள் புகுந்த நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பத்திரிக்கையாளர்கள் பலியாகி உள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னாபோலிஸ் பகுதியில்‘கேப்பிட்டல் கெசட்’  எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் நேற்று அந்த அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில்  5 பத்திரிக்கையாளர்கள்  பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அந்த மர்ம நபரை கைது செய்தனர். அவன் அந்த செய்தி நிறுவனம் மீது  தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் கடும் ஆத்திரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸார் நடத்திய  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
இத்தாக்குதல் சம்பவத்திற்கு வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.