1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (20:25 IST)

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன்: தூக்கில் தொங்கி தற்கொலை

suicide
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீட் தேர்வு அச்சம் காரணமாக ஏற்கனவே பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் கோச்சிங் சென்டரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சந்துரு என்ற 17 வயது மாணவர் பயின்று வந்தார். 
 
இந்த நிலையில் அந்த மாணவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜன் நேரில் விசாரணை செய்ததாகவும் மாணவர் என் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva