வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (09:11 IST)

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை: தொடரும் சோகம்!

ஆன்லைன் ரம்மியால் ஏற்கனவே பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு 26 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடியதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து அதன் காரணமாக மனவிரக்தி அடைந்து தற்கொலை செய்யும் சோக நிகழ்வு தொடர்கதை ஆகி வருகிறது. 
 
இந்த நிலையில் திருச்சியை அடுத்த மணப்பாறை என்ற பகுதியைச் சேர்ந்த வில்சன் என்ற 26 வயது இளைஞர் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் விளையாடியதாக தெரிகிறது. ளி அதில் அவர் தனது சொந்த பணத்தை இழந்தது மட்டுமின்றி கடன் வாங்கி விளையாடியதை எடுத்து அனைத்து பணத்தையும் இழந்து உள்ளார் 
 
இதனை அடுத்து மணமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரது தற்கொலை அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.
 
 இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை நிகழ்வு தொடர்ந்து வருவதை அடுத்து இதற்கு முடிவு கட்ட உடனடியாக கவர்னர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
 
Edited by Siva