திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (17:59 IST)

திருமண விழாவில் நடனமாடிய மாணவர் உயிரிழப்பு: சென்னையில் சோகம்..!

சென்னையில் திருமண விழாவில் நடனமாடிய மாணவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே திருமண விழாவில் சோக நிகழ்வு நடந்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி வரும் நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் திருமண விழா ஒன்று நண்பர்களோடு சேர்ந்து கல்லூரி மாணவர் ஒருவர் நடனம் கொண்டிருந்தார் 
 
இந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அடுத்து அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த மாணவர் சத்யசாய் ரெட்டி என்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 
 
உயிரிழந்த மாணவர் சத்யசாய் ரெட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார் என்பதும் கூறப்படுகிறது. திருமண விழாவில் நடனமாடிய இளைஞர் திடீரென உயிரிழந்த விவகாரம் திருமண வீட்டாரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
 
Edited by Mahendran