உலக அளவில் கொரோனாவால் பலி: 3 லட்சத்தை நெருங்குவதால் பரபரப்பு
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43.39 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,00,728ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,92,804ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 14,08,636ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,425ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 269,520ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,920ஆகவும் உள்ளது. ரஷ்யாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 232,243ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,116ஆகவும் உள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 226,463ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,692ஆகவும் உள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 221,216ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,911ஆகவும் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 178,225ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,991ஆகவும் உள்ளது.