திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (23:01 IST)

4 - ஆம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும்.. - பிரதமர் மோடி

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இரவு எட்டு மணிக்கு உரையாற்றத் தொடங்கினார். அதில், அவர் வரும் 17 ஆம் தேதிக்குப் பிறகான 4 ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும், ரூ.20 லட்சம் கோடிக்கு நாட்டில் பொருளாதார சிறப்புத் திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

அப்போது அவர், ஏழை எளிய மக்கள் அனைவரும் பொருளாத நிலையில் உயரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சூழ்நிலையிலும் ஊரடங்கு காலத்தில் ஏழை மக்கள் துணிச்சலுடன் அதை எதிர்கொண்டு வருகின்றனர். மூன்று கட்ட ஊரடங்கு வரும் மே 17 தேதியுடன் முடிவுள்ள நிலையில், 4 வது நான்காம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும்.. இதுகுறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், அரசின் கொள்கைகளை எளிதாக்குவதன் பொருட்டு, அந்நிய நாட்டு முதலீடுகள் இங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உலக நாடுகளுக்கு பொருட்கள் சேவை அளிப்பதில் இந்தியாதான் சிறப்புற்று இருக்க வேண்டும். இந்தக் கொரோனா காலத்தில் நம் நாட்டின் பொருளாதாரத்தை நமது உள்நாட்டு உற்பத்தியை தேசம் நம்பியுள்ளது. இந்தியா தயாரிக்கும் இந்த பொருட்களை உலக நாடுகள் கொள்முதல் செய்யும் என தெரிவித்துள்ளார்.