1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (20:45 IST)

ரூ. 20 லட்சம் கோடிக்கு பொருளதார சிறப்புத் திட்டங்கள் – பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இரவு எட்டு மணிக்கு  உரையாற்றத் தொடங்கினார். அதில், அவர் வரும் 17 ஆம் தேதிக்குப் பிறகான 4 ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும், ரூ.20 லட்சம் கோடிக்கு நாட்டில் பொருளாதார சிறப்புத் திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது.

உலகம் என்பது ஒரு குடும்பம்ட தான் அதில் இந்தியாவின் குடும்பம் என்பது சுயநலமின்மை ஆகும். அதனால் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் யாரையு சாராமல் எதையும் சாராமல் தனித்து தன்னம்பிக்கையுடன் நிற்போம்.

இந்த காலம் நமக்கு வழங்கியுள்ள வாய்ப்பு. இந்தியா உலகுக்கே நம்பிக்கை வ்ஒளியாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி உலக வளர்ச்சிக்கு வித்திடும். குறிப்பாக இந்திய மருத்துகள் உலகுக்கே தன்னம்பிக்கை அளித்து வருகிறது. அதுமட்டுமின்று உலகுக்கே  இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா.  கொரொனாவுடன் போராடி உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த  வேண்டும். பலமான இந்தியாவை உருவாக்க நமக்கு இதுவே சிறந்த தருணமாகும்.

கொரோனா பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்கு ரூ. 20 லட்சம் கோடிக்கு பொருளாதார திட்டங்களை நான அறிவிக்க உள்ளேன். இந்திய வளர்ச்சித் திட்டத்தின் மூலம்தான் பொருளாதார வளர்ச்சி அடையும். இதுகுறித்த பொருளாதார அறிவிப்புகள் விரைவில் மத்திய அரசால் வெளியிடப்படும்.

இந்தியாவின் வளர்சி ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார உள்கட்டமைப்பு மிகவும் முக்கியமானது. கொரோனா வைரஸுக்கு முன் இந்தியாவில் தினசரி PPE உடைகள்  தயாரிப்பு கிடையாது. ஆனால் இப்போது தினமும் 2 லட்சம் உருவாக்கும் வல்லமை கொண்டுள்ளோம். உலகின் கொள்கையை மாற்றியமைத்துள்ளோம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 % கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு வழங்க்கப்படும்.

அதேசமயம் ஏழை எளிய மக்கள் அனைவரும் பொருளாத நிலையில் உயரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சூழ்நிலையிலும் ஊரடங்கு காலத்தில் ஏழை மக்கள் துணிச்சலுடன் அதை எதிர்கொண்டு வருகின்றனர். மூன்று கட்ட ஊரடங்கு வரும் மே 17 தேதியுடன் முடிவுள்ள நிலையில், 4 வது பொதுமுடக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதுகுறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும், அரசின் கொள்கைகளை எளிதாக்குவதன் பொருட்டு, அந்நிய நாட்டு முதலீடுகள் இங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.  உலக நாடுகளுக்கு பொருட்கள் சேவை அளிப்பதில் இந்தியாதான்  சிறப்புற்று இருக்க வேண்டும். இந்தக் கொரோனா காலத்தில் நம் நாட்டின் பொருளாதாரத்தை நமது உள்நாட்டு உற்பத்தியை தேசம் நம்பியுள்ளது. இந்தியா தயாரிக்கும் இந்த பொருட்களை உலக நாடுகள் கொள்முதல் செய்யும் என தெரிவித்துள்ளார்.