1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (19:54 IST)

இன்று தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா உறுதி...

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ​தமிழகத்தில் மேலும் 8 பேர் இன்று கொரோனாவால் பலியாகியுள்ளனர். அதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,002 லிருந்து  8,718 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை  2,134 ஆகும். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆகும். இதுவரை பரிசோதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,55,584 பேர் என தெரிவித்துள்ளது.